சாதிய அரசியலின் நோக்கம் ( Caste Politics )

சாதிய அரசியல்?

ஆம் நம் நாட்டில் சாதியை வைத்தே அரசியல் செய்யப்படுகின்றன.

அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வரும் ஓர் அரசியல் தந்திரமே இந்த சாதிய அரசியல்.

மக்களை பிரித்தாலும் கொள்கை என்பது மக்களிடம் பிரிவினையை உருவாக்கி அதன் முலமே அவர்களை ஆட்சி செய்வதே.

அதற்கு அரசியல் செய்யும் அனைவரும் சாதியை ஓர் கருவியாக பயன்படுகித்துகின்றனர்.

அதற்கு சான்றே இன்றைய அளவும் சாதியை சார்ந்து எடுக்கும் திரௌபதி போன்ற படங்களுக்கு அதரவு கொடுத்தும் , சாதி வேரினை அகற்ற முயலும் படங்களுக்கு முட்டு கட்டை போட்டும் அரசியல் நாடகங்கள் நடத்தப்படுகிறது.

இப்போது உங்களுக்கு ஓர் சந்தேகம் வரலாம் , ஏன் படங்களை எதிர்க்கின்றனர் என்று?

படங்கள் ஓர் பெரும் கருவி , அதன் மூலம் நல்லதையோ அல்லது தீயதையோ எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

அப்படி படங்களின் மூலம் சாதிய அரசியல் பற்றி மக்களுக்கு தெளிவு பெற்றுவிட்டால் அவர்கள் பிழைப்பு ஓடாது அல்லாவா.

இந்த சாதிய அரசியலையே அனைத்து சாதிய கட்சிகளுமே நடத்துகின்றனர்.

ஏன் வேட்பாளர் தேர்வு செய்வதைக் கூட சாதிகள் வைத்தே செய்கின்றனர் இந்த மானமற்ற அரசியல் சில்லறைகள்.

உங்கள் ஊரில் தேர்தல் நடக்கும்போது சாதியை தவிர்த்து சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களை நீங்கள் ஆதரித்தாலே பல மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம்.

என்று நம் மக்கள் சாதியை தவிர்த்து , மனிதம் தனை சுமந்து , ஒருமித்த கருத்துடன் நல்லவர்களை தேர்வு செய்கின்றனரோ அன்றே நல்லாட்சி அமையும்.

-இவன் கார்த்திக் மாரிமுத்து

கைகளில் மஞ்சள் கையிறு இதற்காகவே கட்டப்படுகிறது.

பொங்கலின் போது மஞ்சள் கையிற்றினை கையில் கட்டும் வழக்கம் இன்றும் தமிழகத்தில் முதன்மையானதாக இருந்து வருகிறது.

இதன் முதன்மை நோக்கம் வீட்டில் உள்ள அனைவரும் பண்டிகை நாட்கள் முடியும் வரை நோய் நொடி இன்றி இருக்க வேண்டும் என்பதே‌ ஆகும்.

ஆம் பலருக்கும் தெரிந்தார் போலவே மஞ்சள் ஓர் கிருமி நாசினியே , அதன் காரணமாகவே இன்றும் இது பின்பற்றப்படுகிறது.

இதன் காரணமாக தான் கல்யாண வேலையில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்களின் கைகளிலும் காப்புகள் ( துணியினில் சுற்றப்பட்ட மஞ்சள் ) கைகளில் கட்டி விடப்படுகின்றன.

இனி காரணம் அறிந்தே காரியங்களை செய்யுங்கள்.

-இவன் கார்த்திக் மாரிமுத்து
 

ELDER SISTER (THE SECOND MOTHER )

அக்கா தம்பி உறவு

யாருக்கும் புரியாத ஊர் உறவு!! பெரும்பாலானோர்க்கு அமையாத உறவு.

இந்த உறவில் அன்பினை காட்டும் இடமாக சண்டையும் , சச்சரவுமுமே இருக்கும்.

அன்பாய் பேசும் நேரத்தைவிட , அடிதடி நேரமே அதிகமாகும்.

எத்தனை தின்பண்டங்கள் என்னிடம் அவளின் பங்கினில் அவளிடம் வாங்கும் பண்டமும் வசையுமே வயிற்றையும் மனதையும் நிறைக்கும்.

காரணம் இன்றி நடக்கும் அடிதடியால் தாயிடம் என்னால் அவள் வாங்கும் அடியும் , அப்பாவிடம் என்னை அவள் மாட்டி வைத்து வாங்க வைக்கும் உதையுமே எங்கள் பாசத்தின் சான்றுகள்.

இன்று அக்கா தம்பி உறவு அவள் மறுமணமாகி மறுவீடு செல்லும் வரை நடந்த அனைத்தையும் நினைத்தே மீதம் வாழ்வினை கடக்கிறது.

-இவன் கார்த்திக் மாரிமுத்து

The Parents – இன்றைய பெற்றோர்

   காலம் காலமாக பெற்றோர்களுக்கு உரித்தான உணர்வு தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே‌…

அதையே தற்போது பெற்ற கடமை என மாற்றி அமைத்துவிட்டனர்…

இன்றைய பிள்ளைகள் அதை புரிந்து கொள்ளாது பல விசயங்களை செய்து வருகின்றனர்.

பிள்ளைகளே பெற்றார்கள் நீங்கள் கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுப்பதும் , நீங்கள் படிக்காத போதும் தவறு செய்யும்போதும் உங்களை கண்டித்து திருத்துவதும் அதே பாதுகாப்பிற்காகவே.

உங்கள் எதிர்கால பாதுகாப்பிற்காகவே அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள்…

எனவே அவர்களின் மனதினை புரிந்து பிள்ளைகள் தங்கள் பொறுப்பினை ஏற்று நடக்க வேண்டும்
                             

– இவன் கார்த்திக் மாரிமுத்து

காதலனின் கவிதை


பட்டு சேலை நீ உடுத்த 

பாவி மனம் ஏங்கையிலே!!

பட்டுத் தறி ஊசி குத்தி 

பாவை நீயோ போனதெங்கே

பாடையிலே நீ கிடக்க   

பாசம் வைத்த நெஞ்சுருக!!

பாவை உன்னை தீ தனிலே   

தூக்கி வைத்தேன் கண்மனியே…..                                                       

-இவன் கார்த்திக் மாரிமுத்து

இன்றைய காதல் – Now-a-days Love

      காதல் என்பது நேரச் செலவு…
 

இன்றைய காலகட்டத்தில் காதல் என்பதை இளைஞர்கள் ஓர் சிறப்பு மிக்க விசயமாக கருதி செய்து வருகின்றனர்.
 

தங்கள் காதலிப்பதாக தங்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கூறுவது ஓர் பெருமை என கருதப்படுகிறார்கள்.
 

இதற்கு முக்கிய காரணம் இன்றைய நாட்களில் வெளிவரும் படங்களும் , யூடியூப் வீடியோக்களுமே.அதில் காதல் செய்வது சிறப்புமிக்க செயல் போன்று காட்டுவதே ஓர் சித்தரிப்பு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வதில்லை.
 

இன்றைய பெரும்பாலான காதல் எனும் வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படும் இடமாக பள்ளிக் கூடங்களும் , கல்லூரிகளுமே இருக்கின்றன.
 

அரியாத வயதில் அவர்களிடம் இவற்றை விதைப்பவை சினிமா படங்களே. 
 

உண்மை உரைக்க வேண்டும் எனில் இன்றைய அளவில் சினிமா படங்கள் ஜாதிய கொள்கைகளை தினிப்பதற்கும் , அரசியலை வெளிப்படுத்தவுமே பயன்படுத்தப்படுகிறது. இதை புரிந்துக்கொள்ளும் வயது வரும் முன் அதில் காட்டும் கதாபாத்திர சிதறல்களை உண்மை என கருதி உங்கள் வாழ்வினை தொலைக்க வேண்டாம்.
 

இன்றளவும் ஜாதிகளும் , ஜாதிய படுகொலைகளும் நடக்கிறது. எனவே தயவு கூர்ந்து வாழ்க்கையை காதல் என்று தொலைத்துவிடாதிர்கள்.                             

  – இவன் கார்த்திக் மாரிமுத்து

Status Sothanaigal

  நான் இன்னைக்கு போட்ட Status எப்புடி இருந்துச்சு?
 

இன்றைய இளைஞர்களின் தினசரி விவாதங்களில் பேசும் பொருளாகவே அமைந்துவிட்டது.
 

சமூக வலைத்தளங்களில் மாணவர்களை அதிக நேரம் செலவிடவே இத்தகைய சேவைகள் உருவாக்கப் படுகின்றன.
 

இந்த Status என்றால் என்ன ? அது எவ்வாறு உபயோகமாக பயன்படுத்தப்படுகிறது? அதை எப்படி பயன்படுத்துவது தவறு என்பவற்றை இதில் காண்போம்.

Status – நிலை 
 

ஆம் நிலையினை உணர்த்துவதாகவே இவை இருக்கின்றன.
 

தங்களின் திறமையினை வெளிபடுத்த பலரும் இதனை வழித்தடமாக Instagram , Facebook போன்றவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். 
 

ஆனால் அது வாட்ஸ் ஆப் போன்ற செய்திகளில் இல்லை. குறுகிய தொடர்பு எண்களிடம் நீங்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தி அதிக பயன் இல்லை. 
 

இவர்கள் ஒருபுறம் இருக்க மற்றொரு வகையினரும் இதில் உள்ளனர். தங்கள் பிடித்த பாடல்களையும் , நகைச்சுவை , திமிரினை வெளிபடுத்தும் வீடியோக்களையும் போட்டு… பார்ப்பவர்களின் டேட்டாவினை காலி செய்வதே வேலையாக இருப்பார்கள்.
 

இவர்களுக்கு எல்லாம் ஒருபடி மேலே சென்று, தாங்கள் குளிப்பது , குடிப்பது , சாப்பிடுவது , வெளியே செல்வது என அனைத்தயும் தங்கள் ஸ்டேட்ஸில் பதிவேற்றம் செய்யும் பல பைத்தியங்களும் இருக்கின்றனர்.

 நீங்கள் இவற்றில் எவ்வகை என நீங்களே அறிந்து கொண்டு உங்கள் வாழ்வினை மாற்றி அமையுங்கள் 
                                     

 -இவன் கார்த்திக் மாரிமுத்து